தன்னை வீட்டில் யாரும் ஏற்றுக் கொள்ளாத விரக்தியில் முதியவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள வெய்காலிபட்டி மேல் தெருவில் முத்துராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தை விட்டு கடந்த 20 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டிற்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முத்துராஜ் வந்த போதும், அவரை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனையடுத்து மிகவும் மன உளைச்சலில் இருந்த முத்துராஜ் கல்யாணிபுரம் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் குதித்து தற்கொலை செய்துவிட்டார்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சிலர் தென்காசி தீயணைப்பு நிலையத்திற்கும், கடையம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்து விட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் முத்துராஜன் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.