Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“அவ போன இடத்திற்கே நானும் போறேன்” முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்…!!

மனைவி கொரோனா தொற்றுக்கு பலியானதால் விரக்தியில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கீழ பூவாணி கிராமத்தில் ராமதாஸ் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ராமதாஸின் மனைவிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனால் மனைவி இறந்த நாள் முதலே ராமதாஸ் மிகவும் மனவருத்தத்துடன் இருந்துள்ளார். அவ்வபோது தன் மனைவி சென்ற இடத்திற்கே தானும் செல்ல இருப்பதாக சிலரிடம் புலம்பியுள்ளார்.

இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த ராமதாஸ் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் மயங்கிய நிலையில் இருந்த ராமதாசை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் ராமதாஸ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த புளியம்பட்டி காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |