Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ரொம்ப கஷ்டமா இருக்கு… முதியவர் எடுத்த விபரீத முடிவு… கதறி அழுத குடும்பத்தினர்…!!

உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த முதியவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஏர்வாடி பகுதியில் பரமசிவம் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவருடைய இரண்டு மகள்களும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் உறவினரான மூர்த்தி என்பவருடன் வசித்து வந்த பரமசிவத்திற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குடலிறக்க நோய் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பரமசிவம் அப்பகுதியிலுள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று முதியவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |