கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 114 வயது முதியவர் வெற்றிகரமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்
உலக நாடுகளிடையே பரவிவரும் கொரோனா தொற்று அதிக அளவு வயதில் முதிர்ந்தவர்களை தாக்குவதாகவும் உயிரிழந்தவர்களில் அதிகமானவர்கள் வயதில் முதிர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் வெளியாகி வந்தது. ஆனால் அதிலும் சில அதிசயமான சம்பவங்கள் நடக்கத்தான் செய்கிறது. அவ்வகையில் ஆப்பிரிக்காவை சேர்ந்த அபா திலாகுன் வேர்டேமிக்கேல் என்பவர் தனது 114 வயதில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து வெற்றிகரமாக மீண்டு வந்துள்ளார். இவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தலைநகரான அடீஸ் அபாபா நகரில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அறிகுறிகள் ஏற்படுவதற்கு முன்பே மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில் முதியவரின் உடல்நிலை மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது. இதனை தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு ஆக்ஸிஜன் கொடுத்து தீவிர சிகிச்சை அளித்ததை தொடர்ந்து அவர் தற்போது குணம் அடைந்து 14 நாட்கள் கழித்து மருத்துவமனையிலிருந்து அபா தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
114 வயதாகும் இவர் 1935-1941 காலகட்டத்தில் இத்தாலியில் நடந்த ஆக்கிரமிப்பு போராட்டம், 1974ல் பேரரசர் ஹெயில் சிலாசித் பதவி நீக்கம், 1991ல் மார்க்சிஸ்ட் டெர்க் ஆட்சியின் வீழ்ச்சி என பல நிகழ்வுகளை கண்டவர். தற்போது இவர் கொரோனா தொற்றையும் கண்டு வெற்றி பெற்றதை அங்கு மிகவும் அதிசயமாகவே பார்க்கின்றனர். அவர் இப்போது தனது பேரனின் பராமரிப்பில் அவரது வீட்டில் வசித்து வருகின்றார்