Categories
மாநில செய்திகள்

“இந்தியாவில் 6 மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்”….. தமிழகத்தில் எப்போது….? பாமக ராமதாஸ் கேள்வி….!!!!!

தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என பாமக நிறுவன ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற நிலையில், முதல்வராக சுக்விந்தர்சிங் சுகு பொறுப்பேற்றுள்ளார். இவர் முதல்வராக பொறுப்பேற்றதும் பொருளாதார நெருக்கடிகளை பெரிது படுத்தாமல் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார். இந்தியாவில் பழைய ஓய்வூதிய அமல்படுத்துவது என்பது சாத்திய மற்றது என்று பொருளாதார வல்லுனர்கள் கூறி வந்தார்கள்.

ஆனால் அதை எல்லாம் முறியடித்து ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஜார்கண்ட் ஆகிய 5 மாநிலங்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி வெற்றி கண்டது. இந்த லிஸ்டில் ஆறாவதாக தற்போது இமாச்சலப் பிரதேசமும் இணைய இருக்கிறது. இந்நிலையில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றால் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த நிலையில் இதுவரை பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப் படவில்லை.

இந்தியாவில் தமிழகத்தில் தான் முதன் முதலில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி நாட்டுக்கே முன்னோடியாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அந்த வாய்ப்பை அரசு தவற விட்டு விட்டது. எனவே இனியாவது அரசு ஊழியர்களின் நலனைக்காகும் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிடுங்கள் என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என பலரும் வலியுறுத்தப்பட்டு வருவதால் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |