முன்னணி நடிகர்கள் ஒன்றாக எடுத்துக் கொண்ட பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் விஜய், விக்ரம் மற்றும் சூர்யா. விஜய் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கும் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். இதேபோல் சூர்யா, இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் ‘சூர்யா39’ மற்றும் ‘சூர்யா40’ படத்தில் நடிக்க வருகிறார்.
மேலும் விக்ரம் ‘கோப்ரா’ திரைப்படத்திலும் அதன்பிறகு ‘சியான்60’ படத்திலும் நடிக்க உள்ளார். இந்நிலையில் விஜய், விக்ரம் மற்றும் சூர்யா ஆகிய மூவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இவர்களுடன் இயக்குனர் பாலா மற்றும் நடிகை லைலாவும் இருக்கின்றனர்.