ரூ.5, ரூ.10, ரூ.100 நோட்டுகள் பெறப்பட்டு புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும் என பரவிய தகவல் உண்மையில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியானது பழைய சீரியஸ் 100 ரூபாய், 10 ரூபாய், 5 ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளதாகவும், வருகிற மார்ச் – ஏப்ரல் மாதத்திற்குள் பழைய ரூபாய் நோட்டுகளைத் திரும்பப்பெறும் பணிகளை முடிக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இந்த தகவலை ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: “ரூ.5, ரூ.10, ரூ.100 பழைய நோட்டுகள் திரும்ப பெறப்படும் என சில ஊடகங்களில் செய்திகள் வெளியானது. ஆனால், இந்த தகவல்கள் முற்றிலும் தவறானவை” என்று ரிசர்வ் வங்கி விளக்கமளித்துள்ளது.