20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியை சேர்ந்த பழமையான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் பணிபுரியும் வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர்களான பிறையா, ராஜகோபால் போன்றோர் கல்வெட்டுகள் குறித்து ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சரவண பொய்கை கிரிவல சுற்றுப்பாதையின் இடது புறத்தில் 20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியை சேர்ந்த ஒரு கல்வெட்டை கண்டுபிடித்துள்ளனர். சுமார் 4 அடி உயரமும், 1 அடி அகலமும் உடைய அந்த கல்வெட்டில் தமிழ் எழுத்துக்களில் 26 வரிகள் பொறிக்கப்பட்டுள்ளது.
அதில் 24 மனை தெலுங்கு செட்டியார் சமூகத்தை சேர்ந்தவர்கள் கிணறு கட்டுவதற்காக வழங்கிய தர்மத்தை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்வதற்காக கிரிவல சுற்றுப் பாதையில் பயணிக்கும் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காகவும், பக்தர்கள் குளிப்பதற்காகவும் அங்கே கிணறு அமைக்கப்பட்டிருப்பதை கல்வெட்டு கூறுகிறது.