அரசு அருங்காட்சியகத்தில் முற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட தாழி பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் அரிய பொருட்கள் இருக்கின்றன. இந்த அருங்காட்சியகத்தில் முதுமக்கள் தாழியை சிறப்பு காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளது. இது 2500 ஆண்டுகள் பழமையானதாகும். இதுகுறித்து காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறும் போது, காட்சிப்படுத்தப்பட்டிருப்பது சிறிய வகை தாழியாகும். இந்நிலையில் சிவப்பு வண்ண பானை வகையை சேர்ந்த இந்த தாழியின் வெளிப்புறம் அலங்கார வேலைப்பாடுகள் செய்துள்ளனர்.
அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் மிகவும் உறுதியான மண்பாண்டங்களை பயன்படுத்தியதாகவும், இறந்தவர்களின் நினைவாக கற்களை கொண்டு பல்வேறு நினைவு சின்னங்களை எழுப்பியதாகவும் தெரிவித்துள்ளார். இந்த தாழிக்குள் இறந்தவர்களின் எலும்புகள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்து புதைத்து விடுவர்.