Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இதற்கு ஏற்பாடு பண்ணுங்க… நடந்தே செல்லும் ஆதிவாசி மக்கள்… அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!!

ஊரடங்கு நேரத்தில் போக்குவரத்து வசதி இல்லாததால் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று ஆதிவாசி மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கி வருகின்றனர்.

தமிழகத்தில் கோரானா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் மற்றும் கூடலூர் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் ஆதிவாசி மக்கள், தோட்டத் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் ஊரடங்கு காலத்தில் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக கிராமங்களிலிருந்து முக்கிய பஜார்களுக்கு சென்று வருகின்றனர்.

ஆனால் தற்போது போக்குவரத்து வசதி இல்லாததால் இந்த ஆதிவாசி மக்கள் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பொருட்களை வாங்கி விட்டு மீண்டும் வீடு திரும்புகின்றனர். இதுகுறித்து ஆதிவாசி மக்கள் கூறும் போது, முழு ஊரடங்கு காலத்தில் போக்குவரத்து வசதி இல்லாததால் நீண்ட தூரம் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், கிராமப்புறங்களில் நடமாடும் மளிகை மற்றும் காய்கறி கடைகளை செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |