Categories
உலக செய்திகள்

ரஷ்யா அவர்களுக்கு போதாதா…? என் வீட்டை எதற்கு அழித்தார்கள்?…. வேதனையுடன் கேட்கும் உக்ரைன் மூதாட்டி…!!!

உக்ரைன் நாட்டை சேர்ந்த 82 வயது மூதாட்டியின் குடியிருப்பு ரஷ்யா நடத்திய தாக்குதலில் அழிக்கப்பட்டிருக்கிறது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 4-ஆவது மாதமாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. மேலும், ரஷ்யா வான்வெளி தாக்குதல் நடத்தியதில் உக்ரைன் நாட்டின் பல குடியிருப்புகள் அழிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அங்கு வசித்து வரும் மரியா மாயாஷ்லபக் என்ற 82 வயதுடைய மூதாட்டியின் குடியிருப்பு வெடிகுண்டு தாக்குதலில் தகர்க்கப்பட்டது.

ரஷ்ய படைகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதல், தன் வீட்டின் சமையலறையை தாக்கியதாக வருத்தத்துடன் அந்த மூதாட்டி கூறியிருக்கிறார். மேலும் அவர் தெரிவித்ததாவது, எனக்கு காயம் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன்.

அந்த சமயத்தில் தான் திடீரென்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. என் தலையின் மீது சில பொருட்கள் விழுந்தது. ரஷ்யா நடத்திய வான்வெளி தாக்குதலில் என் குடியிருப்பு மொத்தமாக சேதமடைந்திருக்கிறது. இறைவனிடம் நான் கேட்கிறேன், ரஷ்யாவிற்கு என்ன வேண்டும்? ரஷ்ய நாடு அவர்களுக்கு போதவில்லையா? எதற்காக மக்களை கொன்று வருகிறார்கள்? இதற்கான காரணத்தை நான் இறைவனிடம் கேட்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |