மூதாட்டி ஜீவசமாதி அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள எறும்பூர் பகுதியில் விஜயலட்சுமி (வயது 102) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பொன்னுசாமி என்ற கணவர் இருந்துள்ளார். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு விஜயலட்சுமியின் கணவரான பொன்னுசாமி உயிரிழந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு தேவதத்தை, சுசிலா, நாகரத்தினம், கஸ்தூரிபாய், சாந்தா, கவுரி ஆகிய 6 மகள்கள் உள்ளனர். இதனை அடுத்து விஜயலட்சுமி சுசீலா மற்றும் நாகரத்தினம் வீடுகளில் வசித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை விஜயலட்சுமி உடல் ஆரோக்கியத்துடன் இருந்துள்ளார்.
இதனை அடுத்து விஜயலட்சுமி விரதமிருந்து ஜீவசமாதி அடைய முடிவெடுத்தார். அதன் பிறகு பொன்னூர் மலை அடிவாரத்தில் இருக்கும் தவ நிலையத்திற்கு விஜயலட்சுமி சென்றுள்ளார். அங்கு விஜயலட்சுமி உணவு எதுவும் பருகாமல் விரதம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் மூதாட்டியான விஜயலட்சுமி பொன்னூர் மழையிலேயே தனது உயிரை துறந்துள்ளார். அதன் பின்னர் விஜயலட்சுமியின் உறவினர்கள் வழக்கம்போல் கொப்பரை தேங்காய், சந்தனக்கட்டை, தேங்காய் ஓடு ஆகியவற்றை அடுக்கி 15 டின் நெய் மூலமாக அவரது சடலத்தை எரிந்துள்ளனர். அதன் பின் மூதாட்டியான விஜயலட்சுமி ஜீவசமாதி அடைந்துள்ளார்.