வீடு இடிந்து விழுந்து மூதாட்டி படுகாயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புல்லலக்கோட்டை பகுதியில் நகராட்சி துப்புரவு பணியாளர்களுகான காலனி அமைந்துள்ளது. இங்கு ஓய்வுபெற்ற நகராட்சி பணியாளரான நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் இவர்களது வீட்டுச்சுவர் திடீரென்று இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் லட்சுமி படுகாயமடைந்துள்ளார்.
இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் லட்சுமியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அங்குள்ள துப்புரவு பணியாளர்கள் பழைய கட்டிடங்களை இடித்து புதிதாக வீடுகள் கட்டித்தர வேண்டும் என அதிகாரிகளுக்கு தங்களின் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.