மனைவியை பிரிந்து தனியே இருந்த முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் .
நாசரேத்து மில்ரோடு சேர்ந்த பூ வியாபாரியான ஆறுமுகம் ஏற்கனவே 2 முறை திருமணம் செய்து மனைவியர் இறந்து விட்ட காரணத்தினால் மூன்றாவது முறையாக கஸ்தூரி என்பவரை திருமணம் செய்திருந்தார். கடந்த 15 தினங்களுக்கு முன்பு கஸ்தூரியின் தாயார் உடல்நிலை பாதிக்கப்படவே கஸ்தூரி சென்னை சென்றுள்ளார்.
மனைவியை பிரிந்து தனியாக இருந்த ஆறுமுகம் மன வேதனையிலும் மன விரக்தியில் இருந்துள்ளார். இதனால் வீட்டில் யாரும் இல்லாத சமயம் ஆறுமுகம் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் நாசரேத் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஆறுமுகத்தின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.