பழைய சோற்றின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.
கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறாமல் உள்ளேயே முடங்கி இருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் கிடைக்கின்ற காய்கறிகளை வாங்கி அதற்கேற்றவாறு சமைத்து உணவு சாப்பிட்டு வருகின்றனர் மக்கள். இந்த சூழ்நிலையில் நாம் நமது பழைய பாரம்பரிய உணவுகளை சற்று திரும்பி பார்க்கலாம். பழைய சோறு வயிறு தொடர்பான நோய்களை நீக்கும்.
உடல் சோர்வு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும் தீர்வு அளிக்கும். அனைத்து விதமான வயிற்றுப்போக்கும் பழைய சோறு வரப்பிரசாதம். நோய் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கும் பழையசோறு உதவுகிறது. இதற்கு காய்கறிகள் தேவைப்படாது. வேண்டுமென்றால் பச்சை மிளகாய், வெங்காயத்தை இதற்கு சைடு டிஷ் ஆக வைத்துக் கொள்ளுதல் மிக நல்லது. இதை தவிர வேறு ஏதும் தேவையில்லை என்பதால், செலவும் இல்லை, உடலுக்கும் நல்லது.