பயன்படுத்திய பொருட்களை விற்பனை செய்யும் OLX ஆப் மூலமாக 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக ராஜஸ்தானை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆப் மூலமாக மோசடி நடைபெற்று வருவதாக மத்திய குற்றப்பிரிவு காவல் துறைக்கு ஏராளமான புகார் வந்தன. இது தொடர்பாக கூடுதல் துணை ஆணையர் சரவணக்குமார் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை மோசடி கும்பலை ராஜஸ்தானிலிருந்து செயல்படுவதை கண்டுபிடித்தனர். பின்னர் அங்கு உள்ள கிராமத்தில் உலாவிய அவர்கள் மோசடிகளில் ஈடுபட்டதாக நரேஷ் பால் சிங் ஆகியோரை கைது செய்தனர். அதை தடுத்த கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் இருவரையும் சென்னைக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.