டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது.
32-வது டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது .இதில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஹாக்கி லீக் சுற்றில் ‘ஏ’ பிரிவுக்கான 2-வது லீக் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொண்டன.
இதில் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இறுதியில் இந்திய அணி 1-7 என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்தித்தது. இதில் இந்தியா சார்பில் சிங் தில்பிரீத் 34-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதையடுத்து ஆஸ்திரேலிய அணியில் கோவர்ஸ் தலா 2 கோல்கள் அடிக்க மொத்தமாக 7 கோல்களை அடித்தது .