டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் சாய் பிரனீத் தோல்வியடைந்து வெளியேறினார்.
டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான பேட்மிட்டண் போட்டி நடைபெற்றது. இதில் ‘டி’ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்திய வீரரான சாய் பிரனீத் கடந்த 24- ஆம் தேதி நடந்த முதல் ஆட்டத்தில், இஸ்ரேல் நாட்டு வீரரான மிஷா ஜில்பெர்மனை எதிர்கொண்டார். இதில் 17-21, 15-21 என்ற நேர் செட் கணக்கில் சாய் பிரவீன் தோல்வியை சந்தித்தார்.
இதையடுத்து இன்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் நெதர்லாந்து வீரர் மார்க் கால்ஜோவை எதிர்கொண்டார். ஆனால் இந்தப் போட்டியிலும் 14-21, 14-21 என்ற நேர் செட் கணக்கில் சாய் பிரனீத் தோல்வியடைந்து வெளியேறினார்.