Categories
உலக செய்திகள்

“எங்கள் நாட்டிலிருந்து அதிகாரிகள் வர மாட்டார்கள்!”….. ஜப்பான் அரசு வெளியிட்ட தகவல்….!!

சீனாவில், வரும் பிப்ரவரி மாதம் நடக்க இருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை பார்க்க, எங்கள் நாட்டின் அரசு அதிகாரிகள் வரமாட்டார்கள் என்று ஜப்பான் அறிவித்திருக்கிறது.

சீனாவின் தலைநகரான பீஜிங்கில் நடக்க இருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில், ஜப்பான் நாட்டின் சார்பில், டோக்கியோ ஒலிம்பிக் 2020 ஆம் வருடத்திற்கான தலைவர் மற்றும் தங்கள் நாட்டின் ஒலிம்பிக் கமிட்டி தலைவர் இருவரும் தான் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதாவது சீன நாட்டில் உய்குர் முஸ்லிம்களை எதிர்த்து மனித உரிமை மீறல் நடக்கிறது. அதனை எதிர்க்கும் விதமாக, ஆஸ்திரேலியா, கனடா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா போன்ற பல நாடுகள் பீஜிங்கில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை புறக்கணித்து வருகிறது. எனினும் அந்நாடுகளின் வீரர்கள் அந்த போட்டியில் பங்கேற்க தற்போது வரை எந்த தடையும் விதிக்கப்படவில்லை.

Categories

Tech |