Categories
விளையாட்டு ஹாக்கி

ஒலிம்பிக் ஹாக்கி : 41 வருசத்துக்கு பிறகு …. சாதனை படைக்குமா இந்திய அணி ….? இங்கிலாந்துடன் இன்று மோதல் ….!!!

ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள்  இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன .

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் ஹாக்கி போட்டியில் காலிறுதி ஆட்டம் ஒன்றில் உலகத் தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி , 5-வது இடத்தில் உள்ள இங்கிலாந்து அணியுடன் இன்று மோதுகிறது. இதில் நடந்த லீக் சுற்றுகளில் ‘ஏ ‘பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி 4 அணிகளுடன் மோதி கடைசி 3 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றது. இதையடுத்து’ பி ‘பிரிவில் இடம் பிடித்துள்ள இங்கிலாந்து அணி 2 வெற்றி 2 தோல்வியும் மற்றும் ஒரு போட்டியில் டிராவுடன் 3-வது இடத்தில் உள்ளது. இதனால் இன்று நடைபெறவுள்ள போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.

8 முறை சாம்பியனான இந்தியன் ஹாக்கி அணி இறுதியாக கடந்த 1980-ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தை வென்றது. அதன் பிறகு 41 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்திய அணி அரையிறுதியில் கால் பதிப்பதற்கான  வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் இன்று நடைபெற உள்ள போட்டி ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை ஒலிம்பிக்கில் இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட போட்டியில் தலா 4 வெற்றிகள் பெற்றுள்ளது. இப்போட்டி இந்திய நேரப்படி இன்று மாலை 5.30  மணிக்கு தொடங்குகிறது. இதனை சோனி டென்4 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Categories

Tech |