டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா அணியை வீழ்த்திய இந்திய அணி கால்இறுதிக்கு முன்னேறியது .
டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று ஆண்களுக்கான ஹாக்கி போட்டி நடைபெற்றது. இதில் ‘ ஏ ‘ பிரிவில் இருந்த அர்ஜென்டினா – இந்தியா அணிகள் மோதிக்கொண்டன. இதில் முதல் இரு காலிறுதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதன்பிறகு 43-வது நிமிடத்தில் இந்திய வீரர் வருண் குமார் அடுத்த கோல் திருப்பு முனையாக அமைந்தது.
இதையடுத்து ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் இந்திய அணி அதிரடியாக விளையாடியது. இதில் 58- வது நிமிடத்தில் விவேக் சாகரும் , 59- வது நிமிடத்தில் ஹர்மன்பிரீத் சிங் தலா 1 கோலை அடித்தனர். இதனால் இறுதியாக 3-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்று கால்இறுதிக்குள் நுழைந்துள்ளது.