டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் ஹாக்கி போட்டி அரையிறுதியில் இந்திய மகளிர் அணி போராடி தோல்வியடைந்தது .
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான ஹாக்கி போட்டியில் அரையிறுதியில் இந்தியா – அர்ஜென்டினா அணிகள் மோதின.இதில் தொடக்கத்தில் இந்திய அணி முதல் கோலை பதிவு செய்தது. இதைத்தொடர்ந்து அர்ஜென்டினா அணியும் முதல் கோல் அடிக்க 2-ம் கால்பகுதி ஆட்ட முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்தது.
இதைத் தொடர்ந்து நடந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி மேலும் ஒரு கோல் அடித்தது. இதனால் 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய மகளிர் அணி போராடி தோல்வியடைந்தது. இதையடுத்து நடைபெற உள்ள வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இங்கிலாந்து அணியுடன் இந்திய அணி போதுமானது.