டோக்கியோ ஒலிம்பிக்கில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ள இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
32- வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிருக்கான ஹாக்கி போட்டியில் கால்இறுதி சுற்றில் இந்திய அணி தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணியுடன் மோதியது. இதில் முதல் கால் பகுதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை .இதையடுத்து 2-வது கால் பகுதி ஆட்டத்தில் இந்திய அணி அபாரமாக விளையாடியது .அப்போது ஆட்டத்தில் 22-வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை குர்ஜித் கவுர் கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி முதல் கோலை பதிவுசெய்தார். இதனால் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது .இதையடுத்து 4-வது மற்றும் 5-வது கால் பகுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு கோல் அடிக்க பல வாய்ப்புகள் கிடைத்தும்,கோல் அடிக்க முடியவில்லை .
I am absolutely delighted at the victory of Indian women's #Hockey team against Australia to storm into the semi-finals. You're scripting history. I wish you all the best to enter the finals and clinch the #Olympics #Gold.#Tokyo2020 https://t.co/LIaT0bEHY7
— M.K.Stalin (@mkstalin) August 2, 2021
இதனால் கடைசி 3-வது மற்றும் 4-வது கால்பகுதி ஆட்டங்களில் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை .இதனால்1-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. இந்நிலையில் ஒலிம்பிக்கில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பக்கத்தில் , ‘ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று அரையிறுதிக்குள் முன்னேறியதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்து ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தை வெல்ல வாழ்த்துக்கள் ‘ என்று அவர் பதிவிட்டுள்ளார்.