ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி லீக் போட்டியில் ஜப்பானை அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவருக்கான ஹாக்கி போட்டிகள் இன்று நடைபெற்றது. இதில் இந்தியா – ஜப்பான் அணிகள் மோதிக் கொண்டன. இதில் தொடக்கத்திலிருந்தே இந்திய அணி ஆதிக்கத்தை செலுத்தி வந்தது. இதில் ஆட்டத்தின் 13-வது நிமிடத்தில் இந்திய அணியில் ஹர்மன்பிரீத் சிங் முதல் கோலை பதிவு செய்தார் .இதைத்தொடர்ந்து ஆட்டத்தின் 2-வது கால் பகுதியில் இந்திய அணியில் குர்ஜந்த் சிங் 15-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார் .இதனால் இந்திய அணி 2 கோல் அடித்து முன்னிலையில் இருந்தது. இதையடுத்து 19-வது நிமிடத்தில் ஜப்பான் அணியில் டனகா முதல் கோலை பதிவு செய்தார்.
இதையடுத்து 3-வது கால் பகுதி ஆட்டத்தில் ஜப்பான் வீரர் ஹுடனபி 33-வது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்க ஜப்பான் அணி 2 கோல் அடித்தது .இதனால் இரு அணிகளும் சமனில் இருந்தது. இதன் பிறகு ஆட்டம் சூடு பிடிக்க தொடங்கியது. இதில் இந்திய அணி தொடர்ந்து சிறப்பாக விளையாடியது. அப்போது ஆட்டத்தின் 39வது நிமிடத்தில் இந்திய அணியில் ஷம்ஷர் சிங் மற்றும் 51 -வது நிமிடத்தில் நீலகண்ட ஷர்மா இருவரும் தலா ஒரு கோல் அடித்தனர். இதையடுத்து பெனால்டி கார்னர் முறையில் இந்திய அணி மேலும் ஒரு கோல் அடிக்க 5-ஆக அதிகரித்தது. இறுதியாக 5-3 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.