டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டையில் போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
32-வது டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 69 கிலோ எடைபிரிவு குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய வீராங்கனை லோவ்லினா போர்கோஹைன், ஜெர்மனி வீராங்கனை நடின் அபேட்ஸ்-ஐ எதிர்கொண்டார்.
இதில் 28-29, 29-28, 30-27, 30-27, 27-30 என புள்ளிகளைப் பெற்று 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்ற லோவ்லினா காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இதையடுத்து 30ஆம் தேதி நடைபெற உள்ள காலிறுதி சுற்றில் சீனாவின் தைஃபேயின் என்சி சென்-ஐ எதிர்கொள்கிறார்.