Categories
Uncategorized

ஒலிம்பிக் குத்துச்சண்டை : இந்திய வீராங்கனை மேரி கோம் …. அசத்தல் வெற்றி ….!!!

ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் 51 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை மேரி கோம் எளிதாக வெற்றி  பெற்று  அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 205 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இன்று  பிற்பகலில் நடந்த மகளிர் குத்துச்சண்டை போட்டியில் பிளைவெயிட் பிரிவு 2-வது சுற்று ஆட்டம்   நடைபெற்றது.

இதில் 6 முறை உலக சாம்பியனான இந்திய வீராங்கனை மேரி கோம்,  டொமினிக்கன் வீராங்கனை மிகெலீனா ஹெர்னாண்டஸை எதிர்கொண்டர் . இதில் நடந்த ஐந்து சுற்றுகளில் முறையே 30-27, 28-29, 29-28, 30-27, 29-28  என புள்ளிகளைப் பெற்று 4-1 என்ற கணக்கில் மேரி கோம் எளிதாக வெற்றி  பெற்று  அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

Categories

Tech |