டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்கள் மல்யுத்த போட்டியில் கால்இறுதியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தோல்வியடைந்தார் .
32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது .இதில் இன்று காலை பெண்களுக்கான 53 கிலோ எடைப் பிரிவு மல்யுத்தப் போட்டியில் கால்இறுதிக்கு முந்தைய சுற்று நடந்தது. இதில் இந்தியாவின் வினேஷ் போகத் ஸ்வீடனை சேர்ந்த சோபியா மேக்டலினாவுடன் மோதினார்.
இப்போட்டியில் வினேஷ் போகத் 7-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறி இருந்தார் .இதையடுத்து நடந்த கால்இறுதி சுற்றில் வினேஷ் போகத் ,பெலாரஸ் வீராங்கனையான வனேசா கலாட்ஜின்ஸ்கயாவை எதிர்கொண்டார் . ஆனால் 3-9 என்ற புள்ளி கணக்கில் வினேஷ் போகத் தோல்வியை தழுவினார்.