Categories
விளையாட்டு

ஒலிம்பிக் போட்டி : 2வது இந்திய நீச்சல் வீரராக …. ஸ்ரீ ஹரி நடராஜ் தகுதி பெற்று சாதனை …!!!

சஜன் பிரகாஷை  தொடர்ந்து  2 வது இந்திய நீச்சல் வீரராக  ஸ்ரீஹரி நடராஜன் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் .

இத்தாலியில் தலைநகர் ரோமில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்று சர்வதேச நீச்சல் போட்டி நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான 100 மீட்டர் பேக்ஸ்டிரோக் பந்தயத்தில்  இந்திய வீரர் ஸ்ரீஹரி நடராஜன் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் 53.77 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து புதிய தேசிய சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் அவர்  ஒலிம்பிக் போட்டிக்கான ‘ஏ’ தகுதியையும் பெற்றுள்ளார். இதில் இதர போட்டியாளர்கள் இன்றி நடக்கும் தகுதி நேர போட்டியில் இலக்கை எட்டும் வீரர்களுக்கு சர்வதேச நீச்சல் சம்மேளனத்தின் அங்கீகாரம் முக்கியமானதாகும்.

இந்த நிலையில் சாதனை படைத்த 20 வயதான இந்திய வீரர் ஸ்ரீஹரி நடராஜனின் தகுதி நேரத்துக்கு சர்வதேச நீச்சல் சம்மேளனம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்மூலம் பெங்களூரை சேர்ந்த  ஸ்ரீஹரி நடராஜன் 2 -வது இந்திய நீச்சல் வீரராக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இவருக்கு முன்பாக கேரள மாநிலத்தை சேர்ந்த சஜன் பிரகாஷ் 200 மீட்டர் பட்டர்பிளை  பந்தயத்தில் தகுதி பெற்றிருப்பது  குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |