கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கனடா டென்னிஸ் வீராங்கனைவ பியான்கா ஆன்ட்ரீஸ்கு ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகியுள்ளார் .
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வருகின்ற ஜூலை 23-ஆம் தேதி ஜப்பானில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர். மேலும் இந்த போட்டியில் கலந்துகொள்ளும் வீரர் ,வீராங்கனைகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் கொரோனா தொற்று அச்சத்தால் வீரர் ,வீராங்கனைகள் சிலர் ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில் பிரபல டென்னிஸ் வீராங்கனை கனடா நாட்டை சேர்ந்த பியான்கா ஆன்ட்ரீஸ்கு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இந்தக் கோடையில் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளாதது மிகவும் கடினமான முடிவுதான் .என்னுடைய சிறு வயதில் இருந்தே ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு கனடாவை பிரதிநிதித்துவப்படுத்துவது என்னுடைய கனவாக இருந்தது என்றார். ஆனால் கொரோனா தொற்றால் ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகுவதாகவும், இது நான் எடுக்கும் சரியான முடிவு .மேலும் எதிர்காலத்தில் நடைபெற உள்ள ஃபெட் கோப்பை போட்டி மற்றும் , பாரிசில் நடைபெறும் 2024 ஒலிம்பிக் போட்டியியை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் “என அவர் பதிவிட்டுள்ளார்.