ஆசிய குத்துச்சண்டை போட்டியில் 20 பேர் கொண்ட இந்திய வீரர் ,வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர் .
துபாயில் நடைபெற உள்ள ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 24-ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது. இந்த போட்டியில் வீரர் ,வீராங்கனைகள் உட்பட 20 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது. இந்த போட்டியில் கலந்துகொள்வதற்காக இந்திய அணி நாளை புறப்படுகிறது. இதில் 6 முறை உலக சாம்பியனான இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் (வயது 38) நேற்று பேட்டி ஒன்றில் கூறும்போது, தற்போது நிலவிவரும் கொரோனா பரவல் காரணமாக பயிற்சி பெற முடியவில்லை என்றாலும், இந்தப்போட்டியில் பங்கேற்பதற்கு ஆர்வமாக இருப்பதாக கூறினார்.
இந்த போட்டியின் மூலம் ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக என்னுடைய திறமையை பரிசோதிப்பதற்கு, இந்த போட்டி மிகவும் முக்கியமானதாகும். பல்வேறு காரணங்களுக்காக பயிற்சிகள் தடைபட்ட நிலையில் தற்போது நடைபெற உள்ள இந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டி மிகவும் முக்கியமானது. இந்தப் போட்டியின் மூலம் ஒலிம்பிக் போட்டிக்கு சிறப்பாக என்னை தயார் செய்வதற்கு ,இது உதவியாக இருக்கும் என்று நம்புவதாக மேரிகோம் கூறினார்.