டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்த தகுதிச்சுற்று போட்டியில் , 2 இந்திய வீரர்கள் கால்இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
ஒலிம்பிக் மல்யுத்த தகுதிச்சுற்று போட்டியானது, பல்கேரியாவிலுள்ள சோபியா நகரில் நேற்று நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான 74 கிலோ எடை பிரிவில் இந்திய வீரரான அமித் தன்கர் மால்டோவா வீரர் மிகைல் சாவானுடன் மோதினார். இதில் 6-9 என்ற புள்ளி கணக்கில்,அமித் தன்கர் தோல்வியடைந்து வெளியேறினார் .
இதைத்தொடர்ந்து 97 கிலோ எடைப் பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் , இந்திய வீரர் சத்யவார்த் காடியன், புயர்டோரிகோ வீரரான இவான் அமாதோர் ரமோஸ்சை , 5-2 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று, கால்இறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதுபோல 125 கிலோ எடை பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் ,இந்திய வீரரான சுமித் மாலிக், மால்டோவா வீரர் அலெக்சாண்டர் ரோமனோவை 3-2 என்ற புள்ளிக் கணக்கில் , வெற்றி பெற்று கால்இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.