டோக்கியோ ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டி, போலந்து நாட்டின் சிலிசியாவில் வருகின்ற மே 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி மே 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் சிலிசியாவில் நடைபெற இருக்கிறது. இந்த தடகள போட்டியானது ,டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான தகுதி சுற்று போட்டி ஆகும் . எனவே இந்த போட்டியில், முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள், நேரடியாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவார்கள் . எனவே இந்த தகுதிச்சுற்று போட்டிக்கு, இந்திய அணியை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்ள இருந்தனர்.
இதற்காக டெல்லியிலிருந்து விமானத்தின் மூலமாக ,போலாந்து நாட்டிற்கு செல்வதற்காக டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது இந்தியாவில்கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, இந்தியாவுடனான விமானப் போக்குவரத்துக்கு நெதர்லாந்து அரசு திடீரென்று தடை விதித்துள்ளது. எனவே விமானங்கள் ரத்தானதால் ,ஒலிம்பிக் தகுதி சுற்றுக்கு இந்திய அணி கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.