டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் வெண்கல பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பை இழந்தார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் செர்பியாவை சேர்ந்த நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச், ஸ்பெயின் வீரரான பேப்லோ கரீரியோ பஸ்டாவுடன் மோதினார். இதில் முதல் செட்டை 6-4 என்ற செட் கணக்கில் கரீரியோ கைப்பற்றினார். இதையடுத்து டை பிரேக்கர் வரை சென்ற போட்டியில் 2-வது செட்டை கடும் போராட்டத்திற்குப் பிறகு 7-6 என்ற கணக்கில் ஜோகோவிச் கைப்பற்றினார்.
இதனால் 1-1 என சமனில் இருந்தது. இதையடுத்து 3-வது செட்டில் ஸ்பெயின் வீரரே ஆதிக்கம் செலுத்தினார். இறுதியாக 6 – 4, 6-7, 6-3 என்ற நேர் செட் கணக்கில் கரீரியோ வெற்றி பெற்றார். இதனால் தங்க பதக்கம் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜோகோவிச் வெண்கலப் பதக்கத்தையும் இழந்து ஏமாற்றம் அளித்தார்.