Categories
விளையாட்டு

ஒலிம்பிக் வாள்வீச்சு : தமிழக வீராங்கனை பவானி தேவி …. 2-வது சுற்றில் தோல்வி …..!!!

ஒலிம்பிக்கில் வாள்வீச்சு போட்டியில் தமிழக வீராங்கனை பவானி தேவி 2-வது சுற்றில் தோல்வியடைந்தார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32 -வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இன்று காலை வாள்வீச்சு போட்டியில் முதல் சுற்றுப்  நடைபெற்றது. இதில் பெண்களுக்கான தனிநபர் சப்ரே பிரிவில் தமிழக வீராங்கனை பவானி தேவி , துனிசியா வீராங்கனை நடியாவை எதிர்கொண்டார் .

இதில் 15-3 என்ற கணக்கில் நடியாவை வீழ்த்திய  பவானி தேவி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதையடுத்து 2-வது சுற்றில் பிரான்ஸ் வீராங்கனை  மனோனுடன் மோதிய  பவானி தேவி 7-15  என்ற கணக்கில் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தார்.

Categories

Tech |