Categories
விளையாட்டு

ஒலிம்பிக் வட்டு எறிதல் : இந்திய வீராங்கனை கமல்ப்ரீத் கவுர் …. பதக்க வாய்ப்பை இழந்தார்…!!!

ஒலிம்பிக்கில் மகளிர் வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் கமல்ப்ரீத் கவுர் 6-வது இடத்தை பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தார் .

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் வட்டு எறிதல் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் 12 வீராங்கனைகள் கலந்து கொண்டனர் .ஒவ்வொரு வீராங்கனைகளுக்கும் தலா 8 வாய்ப்புகள் வழங்கப்படும். இதில் முதல் 3 வாய்ப்புகளில் முதல் 8 இடங்கள் பிடிக்கும் வீராங்கனைகளுக்கு மேலும் மூன்று வாய்ப்புகள் வழங்கப்பட்டது . இதில் இந்தியாவின் கமல்ப்ரீத் கவுர் 63.70  மீட்டர் தூரம் எறிந்து  6-வது இடம்பிடித்தார்.இந்நிலையில் போட்டி நடந்து கொண்டிருக்கும் போது மழை பெய்தது.

இதனால் 3-வது சுற்றில் வீராங்கனைகள் வட்டு எரிவதற்கு சிரமப்பட்டனர். இறுதியில் 6 வாய்ப்புகள் முடிவில் அமெரிக்காவின் வலாரி அல்மான் 68.98  மீட்டர் தூரத்திற்கு வட்டு எறிந்து முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றார் .இதையடுத்து ஜெர்மனி வீராங்கனை புடேன்ஸ்  66.86  மீட்டர் தூரம் வீசி 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார் .இதில் இந்திய வீராங்கனை கமல்ப்ரீத் கவுர் 63.70  மீட்டர் தூரம் வீசி 6-வது இடத்தை பிடித்ததால் பதக்க வாய்ப்பை இழந்தார் .

 

Categories

Tech |