Categories
விளையாட்டு

ஒலிம்பிக் : வெனிசுலாவின் யுலிமார் ரோஜாஸ் ….. தங்கம் வென்று உலக சாதனை படைத்தார் ….!!!

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர்  லாங்க் ஜம்ப் போட்டியில் வெனிசுலா வீராங்கனை யுலிமார் ரோஜாஸ் தங்கப் பதக்கம் வென்று ,உலக சாதனை படைத்துள்ளார் .

டோக்கியோ  ஒலிம்பிக்கில் மகளிருக்கான லாங்க் ஜம்ப் போட்டி  நேற்று நடந்தது .இதில் நடைபெற்ற இறுதிச்சுற்றில் 12 வீராங்கனைகள் பங்கேற்றனர். ஒவ்வொரு வீராங்கனைகளுக்கு தலா 6 வாய்ப்புகள் வழங்கப்படும் . இதில் எது அவர்களுடைய சிறப்பான தாண்டுதலாக  உள்ளதோ அதுவே போட்டியின் முடிவுக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

இதன்படி வெனிசுலா வீராங்கனை  யுலிமார் ரோஜாஸ் தனது 6-வது வாய்ப்பில் 15.67 (+0.7)மீட்டர் தூரத்தை  தாண்டி முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றார். அத்துடன் உலக சாதனை படைத்துள்ளார். அதோடு வெனிசுலா நாட்டிற்கு முதல் தங்கப்பதக்கத்தை பெற்றுக் கொடுத்துள்ளார்.

Categories

Tech |