Categories
விளையாட்டு

ஒலிம்பிக் வில்வித்தை : இந்திய ஆண்கள் அணி …. கால்இறுதி சுற்றுக்கு முன்னேற்றம் ….!!!

டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் இந்திய ஆண்கள் அணி  கால்இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை ஆண்களுக்கான  வில்வித்தை போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணியில் அதானு தாஸ், பிரவீன் ஜாதவ் மற்றும் தருண் தீப்ராய் ஆகியோர் கஜகஸ்தான் அணியை எதிர்கொண்டனர்.

இதில் முதல்  2 செட்டை இந்திய அணி கைப்பற்ற , 3- வது செட்டை கஜகஸ்தான் அணி வென்றது. இறுதியாக 4-வது மற்றும் கடைசி செட்டை இந்திய அணி வென்றது. இதனால் 6-2 என்ற  கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று கால்இறுதி  சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

Categories

Tech |