ஒலிம்பிக்கில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு வில்வித்தை போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேறி உள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு வில்வித்தை போட்டி நடைபெற்றது. இதில் முதல் சுற்றில் இந்தியாவின் தீபிகா குமாரி, பூடான் நாட்டு வீராங்கனை கர்மாவை எதிர்கொண்டார் . இதில் 6-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற தீபிகா குமாரி அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருந்தார்.
இதையடுத்து நடந்த 2- வது சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த ஜெனிபரை எதிர்கொண்டார் . பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 25-26, 28-25, 27-25, 24-25, 26-25 என 6-4 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்ற தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேறி உள்ளார்.