Categories
விளையாட்டு

ஒலிம்பிக் வில்வித்தை : இந்தியாவின் பிரவீன் ஜாதவ் …. 2-வது சுற்றில் தோல்வி …

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர்  ஒற்றையர் பிரிவு வில்வித்தை போட்டியில் இந்தியாவின் பிரவீன் ஜாதவ் 2-வது சுற்றில் தோல்வியடைந்தார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் வில்வித்தை போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் பிரவீன் ஜாதவ் , ரஷ்ய வீரர்  கால்சனை முதல் சுற்றில் எதிர்கொண்டார். இந்தச் சுற்றில் சிறப்பாக அம்புகளை எய்த பிரவீன் ஜாதவ் 6-0  என்ற செட் பாயிண்ட் கணக்கில் வெற்றி பெற்று 2- வது சுற்றுக்கு முன்னேறி இருந்தார்.

இதையடுத்து நடந்த 2-வது சுற்றில் அமெரிக்க வீரர்  பிரேடி எல்லிசனை எதிர்கொண்ட பிரவீன் ஜாதவ் ,6-0 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

Categories

Tech |