Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒலிம்பிக்கில் டி20 கிரிக்கெட்டை சேர்க்க …. தீவிரம் காட்டும் ஐசிசி ….!!!

2028-ம் ஆண்டு அமெரிக்காவின் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற இருக்கும்  ஒலிம்பிக் போட்டியில்  டி20  கிரிக்கெட்டை சேர்க்க ஐசிசி முயற்சி செய்து வருகிறது.

வருகின்ற 2024-ம் ஆண்டு நடைபெறும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை இணைந்து நடத்தும் உரிமத்தை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸிடம் வழங்க ஐசிசி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இதனிடையே 2028-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் டி20 கிரிக்கெட்டை சேர்க்க ஐசிசி முயற்சி செய்து வருகிறது.

அதோடு அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் வகையில் அங்கே டி20 உலக கோப்பை போட்டியை நடத்தினால் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை சேர்க்கும் முயற்சிக்கும் வலுசேர்க்கும் என ஐசிசி கருதுகிறது .இதனிடையே வருகின்ற 2024-ம் ஆண்டு நடைபெறும் டி20 உலக கோப்பை தொடரில் அணிகளின் எண்ணிக்கை 16-ல் இருந்து 20 ஆக உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |