2020 ஆம் ஆண்டில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படும் வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதி அன்று 2020 ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் வைத்து நடைபெறும் என தகவல் வெளியானது. ஆனால் தற்போது கொரோன வைரஸ் பரவுவது காரணமாக ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்யவும் வாய்ப்புகள் வரலாம் என தகவல் அளித்துள்ளனர்.
வருகிற மே மாதத்திற்குள் கொரோன வைரசை கட்டுப்படுத்தாவிட்டால் நிச்சயம் ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்து விடுவதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2600 ஆக உயர்ந்துள்ள நிலையில் ஜப்பானில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே ஜப்பானில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டியானது ரத்து செய்ய அதிகம் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.