குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் ஜோதி, சீனாவின் தலைநகரான பெய்ஜிங் வழியே கொண்டு செல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன தலைநகர் பெய்ஜிங்கில் வரும் 4ஆம் தேதியிலிருந்து 20ஆம் தேதி வரை குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடக்கவிருக்கிறது. சுமார் 30 நாடுகள் கலந்து கொள்ளும் இந்த ஒலிம்பிக் போட்டிகளுக்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெய்ஜிங் மாகாணத்திற்கு வந்த ஒலிம்பிக் ஜோதி, முக்கிய நகரங்களின் வழியே பயணிக்க இருக்கிறது.
அதன்படி, மலைப்பகுதிகள், சீனப்பெருஞ்சுவர் வழியாக ஒலிம்பிக் ஜோதி கொண்டு செல்லப்படுகிறது. இதில் ரோபோ உதவியோடு நீரின் வழியே ஜோதியை கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வரும் 4-ஆம் தேதி என்று BIRDS NEST என்ற விளையாட்டு மைதானத்தில் ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்படுகிறது.