தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபாஸ் பாகுபலி படத்தின் மூலம் உலக அளவில் மிகவும் பிரபலமானார். இவர் தற்போது ஓம் ராவத் இயக்கத்தில் ஆதிபுருஷ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் சீதையாகவும், நடிகர் சைப் அலிகான் ராவணனாகவும் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் அயோத்தியில் மிகப் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, சமூக வலைதளங்களில் கிண்டலுக்கும் ஆளாகியுள்ளது. இதற்கு காரணம் படத்தின் மோசமான VFX தான் என்று கூறப்படுகிறது.
இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளை பார்த்த நெட்டிசன்கள் இதை விட கார்ட்டூன் திரைப்படமே சிறந்தது என்று கூறுகிறார்கள். அதுமட்டுமின்றி இராவணனை கேரக்டரை கில்ஜியாக காட்டியுள்ளனர் என்றும், சைத்ரிய ராமனை பிராமணனாக காட்டியுள்ளனர் என்றும், ஹனுமானின் மீசையை எடுத்து மதம் மாற்றி இருக்கிறார்கள் என்றும் விமர்சிக்கின்றனர். இப்படி ஆதிபுருஷ் படத்தின் டீசர் இணையதளங்களில் விமர்சிக்கப்பட்டாலும் படக்குழு தரப்பில் இருந்து எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படவில்லை. இந்நிலையில் நடிகர் பிரபாஸ் கோபமாக பேசும் ஒரு வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
அந்த வீடியோவில் பிரபாஸ் இயக்குனர் ஓமை மிகவும் கோபமாக கூப்பிடுகிறார். அதாவது ஆதிபுருஷ் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவின் போது கிராபிக்ஸ் காட்சிகளை பார்த்த பிரபாஸ் மிகவும் கோபம் அடைந்ததாக கூறப்படுகிறது. அதோடு பிரபாஸ் இவ்வளவு கோபமாக பார்த்ததில்லை என்றும் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் ரசிகர்கள் பலரும் பாகுபலி படத்தில் நடித்த பிரபாஸை வைத்து இப்படி ஒரு கார்ட்டூன் படத்தை எடுக்கக் கூடாது எனவும் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் தரத்தை உயர்த்துங்கள் எனவும் இணையதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Prabhas angry reaction after teaser on producer #BhushanKumar and director #OmRaut @PrabhasRaju @kritisanon @mesunnysingh @TSeries @aajtak @ZeeNews @omraut pic.twitter.com/hRBgoTTWee
— Nandan kumar (@nandankumarabhi) October 3, 2022