செரிமான பிரச்சனையை போக்கும் ஓமம் டீ செய்வது எப்படி…
தேவையான பொருட்கள் :
கிரீன் டீ – 1 டீஸ்பூன்
ஓமம் – 1/4 டீஸ்பூன்
பனங்கற்கண்டு – தேவையான அளவு
செய்முறை :
முதலில் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதில் கிரீன் டீ, ஓமம் சேர்த்து கொதிக்கவிட வேண்டும். டீ மற்றும் ஓமத்தின் சாறு இறங்கியதும் வடிகட்டி கொள்ள வேண்டும். பின் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துப் பருகினால் ஆரோக்கியமான ஓமம் டீ தயார் !!!