ஓமன் நாட்டில் கொரோனா பாதிப்பு குறித்து தன்னார்வலர்களுடன் இந்திய தூதரகம் சிறப்பு நிகழ்ச்சி நடத்தியுள்ளது.
ஓமன்நாட்டில் இந்திய தன்னார்வளர்கள் காணொலிக் காட்சி மூலமாக சிறந்த ஆலோசனை நடைபெற்றது. இதில் முனு மகவர் என்ற இந்திய தூதர் கலந்து கொண்டு தலைமை தாங்கியுள்ளார். இந்நிகழ்ச்சியில் மஸ்கட், நிஸ்வா, சுகர், இப்ரி, சலாலா போன்ற ஓமன் நாட்டின் பல்வேறு இடங்களில் சமூகப் பணி செய்துவரும் இந்தியர்களுடன் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார்.
இப்பொழுது அவர் அங்கு வசித்து வரும் இந்தியர்களுக்கு கொரோனாவால் ஏற்பட்ட நிலைமை குறித்த தகவல்களையும் அங்கு இருப்பவர்களுக்கு இந்திய தூதரகத்தின் சார்பாக எந்த உதவி தேவைப்படுகிறது என்றும் கேட்டுள்ளார். மேலும் இதற்கு பதிலளித்த இந்திய தூதர தன்னார்வலர்கள் ஜெர்மன் நாட்டின் சுகாதாரத்துறை மக்களிடையே கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும் கூறினார் .
மேலும் தடுப்பூசி செலுத்தி கொள்வதால் ஏற்படும் நன்மை குறித்தும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார். மக்கள் கொரோனா பாதிப்பிலிருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்தக் காணொளி காட்சி மூலம் நடத்தப்பட்ட ஆலோசனையில் இந்திய தூதரக அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.