ஓமன் நாட்டின் மன்னர், சவூதி அரேபிய மன்னரை சந்தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஓமன் நாட்டின் அரசரான சுல்தான் ஹைதம் பின் தாரிக் பின் சேட், சவுதி அரேபியாவிற்கு அரச காரணங்களுக்காக பயணம் மேற்கொள்கிறார். அப்போது சவுதி அரேபியாவின் அரசர் மற்றும் இரண்டு புனிதப் பள்ளிவாசல்களுக்கு காப்பாளரான, சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவுத்துடன் சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது இந்த சந்திப்பின் போது, ஓமனுக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையேயான தரைவழிப் பாதை பணி விரைவாக முடிவடைவது தொடர்பில் பேசுவார்கள். இதனால் 2 நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் உயரும். கடந்த வருடத்தில் சுமார் 1,079 சவுதி அரேபிய நிறுவனங்கள் ஓமனில் முதலீடு செய்திருக்கிறது.
இது சுமார் 18,80,00,000 ஓமன் ரியாலுக்கும் அதிக மதிப்புடையது. இவர்களின் சந்திப்பிற்கு பிறகு ஓமனில் முதலீடுகள் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. கடந்த வருடம் மட்டும் சுமார் 4,93,20,000 ஓமன் ரியால் மதிப்புள்ள பொருட்கள் ஓமனிலிருந்து சவுதி அரேபியாவிற்கு ஏற்றுமதியாகியுள்ளது.