ஓமன் நாட்டில் கொரோனாவால் ஒரே நாளில் 7 பேர் பலியாகியுள்ளனர். இதுகுறித்து ஓமன் சுகாதார அமைச்சகம் செய்திக் குறிப்பினை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் உலக நாடுகள் அனைத்தும் கடந்த ஒரு வருட காலத்திற்கு மேல் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றன. அதனின் தாக்கம் குறைந்த நிலையில் மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. இதனால் ஓமனில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில் 778 பேருக்கு கொரோனா தோற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளன.
இதனால் தற்போது ஓமன் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 528 ஆக அதிகரித்துள்ளது. அதிலும் நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 342 பேர் குணமடைந்து தங்களின் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் ஓமனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 442 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா நோய் தொற்றிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 93 சதவீதமாக இருந்து வருகின்றது.
கொரோனா நோய் தொற்று காரணமாக நேற்று ஒரே நாளில் ஏழு பேர் ஓமன் நாட்டில் பலியாகியுள்ளனர். இதனால் ஓமனில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,729 ஆக உயர்ந்துள்ளது. இதன்பிறகு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உடல்நலக்குறைவால் 104 பேர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனாவின் அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள் வெளியில் செல்லும்போது முக கவசம் அணிந்து, உயிரினை காத்துக்கொள்ள சமூக இடைவெளியை முறையாக பின்பற்ற வேண்டும் என்று ஓமன் சுகாதார அமைச்சகம் அறிவுரை கூறி இத்தகவலை வெளியிட்டுள்ளது.