தீபாவளியை முன்னிட்டு விமான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களில் பணிபுரியும் அல்லது வசித்து வரும் மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர். இதனால் பேருந்துகள் மற்றும் ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் ஏராளமான மக்கள் விமானங்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். இந்நிலையில் விமான நிறுவனங்கள் தற்போது விமான கட்டணம் பன்மடங்கு உயர்த்தியுள்ளது. அதில் சென்னையில் இருந்து டெல்லி செல்ல விமான கட்டணம் 15 ஆயிரமாகவும், சென்னையிலிருந்து கொல்கத்தா செல்வதற்கு 22 ஆயிரமாகவும், சென்னையில் இருந்து பெங்களூரு செல்வதற்கு 6 ஆயிரமாகவும் உயர்த்தியுள்ளது. மேலும் சென்னையிலிருந்து தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களுக்கு செல்வதற்கும் விமான கட்டணத்தை 3 மடங்கு உயர்த்தியுள்ளது.