ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவிய பிளாஸ்டிக் ஏவுகணையால் இரண்டு பெரிய வெடிவிபத்து நிகழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏமன் நாட்டில் கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஹவுதி கிளர்ச்சி படைக்கும், அதிபர் மன்சூர் ஹாதிக்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதன் விளைவாக அங்கு வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதோடு இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர்.
இந்நிலையில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவிய பிளாஸ்டிக் ஏவுகணை மக்கள் தொகை மிகுந்த மரிப்பில் ஏவப்பட்டு, இரண்டு பெரிய வெடி விபத்து நிகழ்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இந்த ஏவுகணை விழுந்ததால் 30 எமன் படை வீரர்கள் படுகாயமடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அமெரிக்கா ஏமனில் நடக்கும் போருக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெறுவதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார்.