Categories
சினிமா தமிழ் சினிமா

OMG : “அஜித் மனைவி ஷாலினி பெயரில் மோசடி?”…. ரசிகர்கள் ஷாக்….!!!!

தமிழ், மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை ஷாலினி பல திரைப்படங்களில் நடித்து பல்வேறு பிரிவுகளில் பல விருதுகளையும் வென்றுள்ளார். மேலும் குழந்தை நட்சத்திரமாக மலையாளத் திரைப்படங்களில் அறிமுகமான நடிகை ஷாலினி ரசிகர்கள் மத்தியில் “பேபி ஷாலினி” என்று புகழ் பெற்றார். இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித்தின் மனைவியும் ஆவார்.

இந்த நிலையில் டுவிட்டரில் நடிகர் அஜீத்தின் மனைவி ஷாலினி இணைந்திருப்பதாக அவர் பெயரில் அக்கவுண்ட் ஒன்று உருவானது. அதனை கண்ட ஏராளமான அஜித் ரசிகர்கள் உடனே அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இந்நிலையில் நடிகர் அஜித்தின் பிஆர்ஓ சுரேஷ்சந்திரா இது முற்றிலும் பொய். ஷாலினி டுவிட்டரில் கிடையாது என்று குறிப்பிட்டுள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் அந்த போலி அக்கவுண்ட்டை முடக்க வேண்டும் என குறிப்பிட்டு வருகின்றனர்.

Categories

Tech |